அஜீத்தால் தன் மகன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்று நடிகர் பிரேம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் பிரேம். அவர் பேட்டி ஒன்றில் அஜீத் பற்றி பேசியுள்ளார். அவர் அஜீத் பற்றி பெருமையாக கூறியதை கேட்டு தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அஜீத் பற்றி பிரேம் கூறியதாவது, வீரம் படப்பிடிப்பின்போது அஜீத் எங்களை எல்லாம் டின்னருக்கு வருமாறு அழைத்தார். நாங்களும் சென்றோம். இரவு 1 மணி வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். அரசியல், சினிமா என்று எது பற்றி வேண்டுமானாலும் அவருடன் பேசலாம். அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார். எல்லா விஷயத்திலும் அப்டேட்டாக உள்ளார் அஜீத். என் மகனுக்கு அஜீத் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் என் மகனுக்கு போன் போட்டு அஜீத் சாரிடம் கொடுத்து பேசுமாறு கூறினேன். அவரும் என் மகனிடம் ஜாலியாக பேசினார். அஜீத்துடன் பேசிய மகிழ்ச்சியில் என் மகன் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை என்றார் பிரேம். சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று தல ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Prem said in an interview that his son didn't sleep after his favourite star Ajith spoke to him over phone.