மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் திருப்பத்தூர் வழியே சென்ற 8 ரயில்கள் நிறுத்தம்- வீடியோ

Oneindia Tamil 2018-03-30

Views 345

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே காங்காங்கரை என்ற இடத்தில் உயர்மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வழியே சென்ற 8 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்துள்ள ரயில்வே ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்கம்பியை சரியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் கம்பியை சீரமைக்க 2 மணி நேரம் ஆகும் என்பதால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனினும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மதுரை-சென்னை துரந்தோ ரயில், திருவனந்தபுரம்-சென்னை திருவனந்தபுரம் மெயில் ரயில்கள் காக்காங்கரையிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-சென்னை ரயில் தோதம்பட்டியிலும், கொச்சுவேலி-பெங்களூரு ரயில் மொரப்பூரிலும் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-சாலிமார் ரயில் லோகுரிலும், திருவனந்தபுரம்-சென்னை ரயில் கருப்பூரிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் எர்ணாகுளம்-ஐதராபாத் சிறப்பு ரயில் பொம்மிடியில் நிறுத்தப்பட்டுள்ளது.


Trains have been stopped near Tiruppattur due to falling electrical wires, It seems to be repaired within 2 hours.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS