வைரலாகும் அமலா பால் புகைப்படம்

Filmibeat Tamil 2018-03-29

Views 1

அமலா பால் இயற்கையை ரசித்து எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். அமலா பால் தமிழ், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது ஆடுஜீவிதம், அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அமலா பால் தனது உடல்நலத்தை கவனித்துக் கொள்வதில் அதிகம் ஈடுபாடு காட்டுகிறார். அமலா பால் காலையில் ஜாகிங் சென்றபோது முந்திரி பழத்தை பறித்து எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் முந்திரி பழத்தை ஜாமூன் என்று தெரிவித்துள்ளார். ஒரு சிலரோ டேக்ஸ் அடைச்சோ( வரி செலுத்திவிட்டீர்களா) என்று கேட்டுள்ளனர். அமலா பால் புதுச்சேரியில் வசிப்பதாக போலி ஆதாரம் தயார் செய்து சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததை தான் அப்படி கேட்டுள்ளனர்.ரோஸ் கலரில் கண்ணாடி போட்டிருப்பதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அமலா பால். அதை பார்த்த ரசிகர்கள் அவர் அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Actress Amala Paul has posted a picture of hers on facebook with fruits. Netizens troll her saying that they are not jamuns as mentioned by her.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS