தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடிவிட முடியாது,ஆலையால் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான பணியை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் இந்த மக்களின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.
TN minister Rajendra balaji says government will not able to close tuticorin Sterlite industry a review has been made and after that only legal actions will be taken against them.