வைரலாகும் அதர்வாவின் ஒர்க் அவுட் வீடியோ

Filmibeat Tamil 2018-03-28

Views 2

அதர்வாவின் ஒர்க்அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நடிகர் முரளியின் மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். தனது உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். எப்பொழுதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஈட்டி படத்தில் நடித்தபோது ஒர்க் அவுட் செய்த வீடியோவை அதர்வா இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் புல் அப் செய்கிறார். வழக்கமாக பாலிவுட் நடிகர்கள் தான் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து பாடியை பில்ட் அப் செய்வார்கள். பாடியை பில்ட்ஆப் பண்ணுவதில் பாலிவுட் நடிகர்களுக்கு கோலிவுட் நடிகர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் அதர்வா. அதர்வாவின் கையில் 5 படங்கள் உள்ளன. இந்த ஆண்டு முழுவதும் அவர் பிசியோ பிசி என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Atharvaa has released a throwback video of him doing pullups while acting in the movie eetti. The video has gone viral on social media.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS