பிக்பாஸ் பிரபலங்கள் பாலிவுட்டில் பாப்புலர்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-28

Views 1.2K

பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் , ரைசா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளம் இயக்குனர் இளன் கைவண்ணத்தில் உருவாகி வரும் படம் 'பியார் பிரேம காதல்'. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே புரொடக்ஷன் ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். காதலை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் மற்ற மொழி உரிமைகளை வாங்க பெரும் போட்டி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. பிரபலமான பாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தின் இந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. யுவன் இசையில் உருவான "high on love" பாடலுக்கு சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்பால் தான் இத்தனை ஆர்வமாம். "இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், இந்தி ஆக்கத்தைப் பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவை" எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் 'பியார் பிரேம காதல்' படத்தின் இயக்குநர் இளன்.

Bollywood production companies are looking for rights of 'Pyaar prema kaadhal' movie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS