தஞ்சையில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் என்ற பெயரில் உண்ணும் விரதம் நடத்தியுள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற பாஜக கலந்தாய்வு கூட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் உச்சநீதிமன்ற கால வரையறைக்குள் காவேரி உரிமை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற உண்ணாரத போராட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்றது குறித்து பேசுகையில் தினரகன் உண்ணாவிரதம் என்ற பெயரில் உண்ணும் விரத போராட்டம் நடத்தியதாகவும் விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் டிடிவி தினகரன் ஈடுபடுவதாக தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
Des : TTVDinakaran fasting in Tanjore in the name of fasting in the name of Tamil Nadu Soundararjan said.