மம்தா பானெர்ஜீ இன்று யாரெல்லாம் சந்திக்க உள்ளார் தெரியுமா!?

Oneindia Tamil 2018-03-28

Views 125

பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்குவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. இன்று பாரதிய ஜனதா கட்சியின் அதிருப்தி தலைவர்களான சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோரையும் மமதா சந்தித்து பேசுகிறார். தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வலிமையான அணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி சென்றுள்ள மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்களை சந்தித்து பேசினார். இன்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மமதா பானர்ஜி சந்தித்து பேசுகிறார். பாஜகவில் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோரையும் மமதா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலம் தேறிய பின்னர் அவரை சந்திக்க இருப்பதாகவும் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

West Bengal Chief Minister Mamata Banerjee will meet BJP rebel leaders Shatrughan Sinha, Yashwant Sinha and Arun Shourie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS