விஜய் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி- வீடியோ

Filmibeat Tamil 2018-03-27

Views 9.1K

விஜய் 62 படம் பற்றி ஒரு விஷயத்தை மிகவும் எதிர்பார்த்த தளபதி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 62. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் விஜய் படம் குறித்து ஒரு தகவல் தீயாக பரவியது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் 62 படத்தில் தளபதி ஒரு பாடல் பாடுகிறார் என்று தகவல் தீயாக பரவியது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சூப்பர் என்று மகிழ்ந்தனர்.

விஜய் 62 படத்தில் தளபதி பாடுவதாக பேசப்படுவது உண்மையா என்று விசாரித்தபோது அவர் பாடவில்லை என்ற பதிலே கிடைத்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரஹ்மான் இசையமைக்க விஜய் பாட அந்த பாடல் 2018ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாகும் என்று ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளனர்.
சினிமா ஸ்டிரைக்கிற்கு இடையேயும் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்க்கு ராசியான சிவாஜியின் வீட்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்களாம்.

Vijay is not singing a song in his upcoming movie Vijay 62 being directed by AR Murugadoss. Vijay fans are disappointed after knowing this information.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS