மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எதியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அமித்ஷா வாய் தவறி குறிப்பிட்டாலும் தேர்தல் நடைபெறும் நிலையில் கர்நாடகா பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில்தான் பாஜக முதன் முதலில் 2008-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரில் சிக்கி எதியூரப்பா முதல்வர் பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார்.