ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தால் நான் வருவேன் என கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குனர் அனில் அகர்வாலின் வீட்டின் முன்பு லண்டனில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் என தெரிவித்துள்ளார்.
Kamal Haasan tweeted that, 'This anti -sterlite peoples agitation needs media support. My new status as a party leader need not be a disqualification or a deterent. I am still part of the Tamizh population. I am committed to this cause.'