சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைப்பேசியில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனையெடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் தி நகர் மற்றும் சரவணா ஸ்டோர் கடையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அனைவரையும் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
B0mb threat to Chennai TNagar Saravana Stores which is in Ranganthan Street.