வீராணம் ஏரி வறண்டதால், சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்திற்கு முன்பே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இது, 6150 ஏக்கர் பரப்பளவும் 1465 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. வீராணம் ஏரியால் சுமார் 45,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த ஆண்டு கோடை காலத்தில் வறண்ட வீராணம் ஏரி பருவமழையால் நிரம்பியது.
Supply of water from Veeranam lake here to Chennai to meet the drinking water needs was stopped from Thursday owing to poor storage, a Public Works Department official said.