மது போதையில் மனைவி மற்றும் குழந்தையை தினமும் அடித்து உதைத்து சித்திரவதை செய்து கொலை செய்ய முயன்றதால் மனமுடைந்த மனைவி தன் குழந்தையுடன் தீ குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் மதனாஞ்சேரியை சேர்ந்தவர் சிவசக்தி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த கார்திக் என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குடி பழக்கம் உள்ள கார்த்திக் தினமும் போதையில் தன் மனைவி குழந்தையை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். நேற்று போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த கார்த்திக் வீட்டில் இருந்த தன் மனைவி மற்றும் குழந்தையை அடித்து சித்திரவதை செய்ததுடன் கொலை செய்யவும் முயன்றுள்ளார். கார்த்திக்கின் இச்செயலை கண்ட அவரது மனைவி சிவசக்தி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் உடலிலும் குழந்தையின் உடலிலும் ஊற்றி தீவைத்து கொளுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.