2019 மக்களவைத் தேர்தலில் தென்இந்தியாவை வளைக்க ரூ. 4,800 கோடியில் ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டத்தை தேசிய கட்சி ஒன்று திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, தமிழில் 'காதல் சுகமானது' என்ற படத்திலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்துள்ளார், சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது நடந்த போராட்டங்களில், மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என குரல் கொடுத்தார். பாஜகவில் சேர்ந்து, மாநிலத்தை பிரித்த காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வந்தார். சில மாதங்கள் வரை எந்த கட்சியிலும் இல்லாமல் சமூக பிரச்சினைகளை மட்டும் சமூகவலைதளங்களில் சுட்டிக் காட்டி வந்தார்.
Telugu film actor Sivaji has said that a national party has taken up ‘Operation Dravida’ to capture power in South India and is spending Rs 4,800 crore for the purpose.