தேனி மாவட்டத்தில் குரங்கணியில் சுற்றுலாப்பயணிகள் 17 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியாகினர். இந்த சம்பவத்தில் இரண்டு மாதங்களுக்குள் முழு விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்று விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலாப்பயணிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மலையேற்றப் பயிற்சிக்காக வந்தனர். இவர்களின் பயணத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தது.