நிஜ வாழ்க்கையில் நடித்த ஹீரோ!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-16

Views 1

நடிகர் ஒருவர் கொள்ளை சம்பவம் நடந்ததாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது. நாகவள்ளி vs ஆப்தமித்ரரு என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் கார்த்திக் விக்ரம்(28). இது தான் அவருக்கு முதல் படம். இந்நிலையில் கார்த்திக் பெங்களூரில் உள்ள பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு அவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். நண்பரை வீட்டில் விட்டு வந்த போது பசவேஸ்வரா நகரில் இருக்கும் வாட்டர் டேங்க் அருகில் 8 பேர் என்னை வழிமறித்து தாக்கினார்கள். என் செல்போன், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் இருந்த பர்ஸ், ஐடி கார்டுகள் மற்றும் என் காருடன் தப்பிச் சென்றுவிட்டனர் என்று கார்த்திக் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த 8 பேரும் தன்னை தாக்கியதாகவும், காயம் அடைந்த தன்னை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கார்த்திக் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி கார்த்திக்கின் கார் சாவி மற்றும் செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தார். தற்போது மருத்துவமனையில் இருக்கும் கார்த்திக் குணமாகியதும் அவரிடம் வாக்குமூலம் வாங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தனது முதல் படத்திற்கு விளம்பரம் தேடவே கார்த்திக் இப்படி நாடகமாடியிருக்கிறார் என்று போலீசார் நம்புகிறார்கள். கொள்ளை நடந்ததாக நாடகமாடிய கார்த்திக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Karthik Vikram, a 28-year-old Kannada actor faked a robbery incident just for publicity in Bengaluru. Police have decided to file a case against him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS