நஷ்ட ஈடு கேட்டு பிரியாமணி புகார்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-15

Views 1.8K

நடிகை பிரியாமணி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கில் தயாராகி உள்ள 'ஆங்குலிகா' என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் விலகிவிட்டார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியானது. இதைப் பார்த்த பிரியாமணி, தான் நடித்த காட்சிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நடிகை பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வரும் பிரியாமணி, 'ஆங்குலிகா' படக்குழுவினரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கில் தயாராகி உள்ள 'ஆங்குலிகா' என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 5 வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில காட்சிகளில் நடித்ததும் பிரியாமணி தொடர்ந்து அந்த படத்தில் நடிக்காமல், படத்திலிருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில், 'ஆங்குலிகா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை பார்த்த நடிகை பிரியாமணி, தான் நடித்த காட்சிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
"ஆங்குலிகா படத்திலிருந்து நான் 5 வருடங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டேன். ஆனால் ட்ரெய்லரில் விளம்பரத்துக்காக, நான் நடித்திருப்பது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ளனர். படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்" என்று புகார் கொடுத்துள்ளார் பிரியாமணி.


Priyamani was signed in the Telugu film 'Angulika' and later left away. Priyamani saw this film's trailer and was shocked. Priya mani has complained to the Telugu Actors Association.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS