மிகவும் ஆரோக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் ஜூஸ் குடிப்பது. உணவுகளை உண்பதனால் மட்டுமின்றி, ஒருசில ஜூஸ்களைக் குடிப்பதாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் வெறும் ஜூஸை மட்டும் 30 நாட்கள் தொடர்ச்சியாக குடித்தால் என்ன நடக்கும்? இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு என்ன நன்மை விளையும்? 30 நாட்களும் வெறும் ஜூஸ் மட்டும் குடித்தால் போதுமா? வேறு எந்த உணவுகளையும் உண்ணத் தேவையில்லையா? என்ற உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விடையை இக்கட்டுரையில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக 30 நாள் ஜூஸ் டயட் என்பது மிகவும் பிரபலமான டயட். அதுவும் உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான டயட். இந்த ஜூஸ் டயட்டை மேற்கொண்டால், திட உணவுகள், சர்க்கரை, இறைச்சிகளான மீன், முட்டை, கோழி, ஆடு என்று எதையுமே உட்கொள்ளக்கூடாது. வேண்டுமானால் ஜூஸ்களில் சுவைக்காக தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
Here are some of the most desired health benefits of 30 day juice fast. Read on to know more...