உடுமலை சங்கர் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி, கவுசல்யா தந்தை உள்பட 8 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Kausalya's father, along with eight others, has filed a case in the Madras High Court seeking to cancel their sentence in Udumalai Shankar murder case.