பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாகதமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
The 3rd number storm warning cage in the Pamban port. It is noteworthy that if the third number of storm warning cages are mounted, the port is threatened by the weather that can be rained with sudden wind.