என்கவுண்டருக்கு பயந்து ரவுடிகள் சரண்...வீடியோ

Oneindia Tamil 2018-03-14

Views 41

தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடிகளை போலீசார் வேட்டையாடி வருகின்றனர். அண்மையில் நள்ளிரவில் சென்னையில் பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடித்து கும்மாளம் போட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதேபோல் மதுரையில் பிரபல ரவுடி இசக்கி முத்து மற்றும் அவனது கூட்டாளியை ஓட ஓட சுட்டு என்கவுண்டர் செய்தனர் . தொடர்ந்து ரவுடிகளை காவல்துறை கைது செய்தும் என்கவுண்டர் செய்தும் வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் உயிருக்கு பயந்து தலைமறைவாகி வருகின்றனர் . பலர் தாமாக முன்வந்து நீதி மன்றங்களில் சரணடைகின்றனர் .இந்நிலையில் வேலூரை சேர்ந்த ரவுடி வசூர் ராஜாவையும் அவனது கூட்டாளிகளையும் பல்வேறு குற்றவழக்குகள் கொலை கொள்ளை ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர் இந்த நிலையில் என்கவுண்டருக்கு பயந்து திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வசூர் ராஜா அவனது கூட்டாளிகளான வீரமணி ,யோகேஷ் ஆகியோர் சரணடைந்தனர் இதனையடுத்து மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்

DES : The police are hunting rounds of various robbery cases across Tamil Nadu

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS