பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை...வீடியோ

Oneindia Tamil 2018-03-14

Views 310

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து தயாநிதி விடுவிக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில் அரசுக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

A CBI court in Chennai will deliver its verdict on the illegal telephone exchange case, involving former Union Telecom Minister Dayanidhi Maran, his elder brother and Suntv kalanithi Kalanithi Maran, on today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS