தில் வீடியோ வெளியிட்ட பாடகி சின்மயி!

Filmibeat Tamil 2018-03-13

Views 10.4K

பொது இடத்தில் தன்னை யாரோ தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். பொது இடங்களில் பெண்களை தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுக்கும் கயவர்கள் திருந்திய பாடில்லை. பாடகி சின்மயி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் அவரை யாரோ தகாத இடத்தில் தொட்டுள்ளார். இதை அவர் துணிச்சலாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சின்மயி தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியதை பார்த்த பலர் தங்களுக்கும் அந்த கொடுமை நடந்ததாக அவருக்கு மெசேஜ் செய்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் குடும்பத்தாரால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது அது பற்றி வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். சொன்னால் நம்புவார்களா என்ற சந்தேகம் உள்ளது என்கிறார் சின்மயி. பெண் குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. அது பெரும்பாலும் வீட்டில் தான் நடக்கிறது. கோவில்களில் கூட பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது என்று சின்மயி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS