தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கருடா காமாண்டோ படை வீரர்கள் 16 பேர் மற்றும் 4 இந்திய விமானப்படை விமானங்கள் இறங்கியுள்ளன. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் நேற்று 40 பேர் சிக்கினர். சென்னையை சேர்ந்த ஒரு குழுவும், திருப்பூரைச் சேர்ந்த ஒரு குழுவும் குரங்கணி பகுதியில் மலையேற்றத்திற்காக சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம் குரங்கணி விபத்து மீட்பு பணியில் தற்போது கேரளா போலீசும் களம் இறங்கி இருக்கிறது. தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.