காதலரை அவாய்ட் செய்யும் நடிகை- வீடியோ

Filmibeat Tamil 2018-03-10

Views 3.1K

சமீபத்தில் ப்ரேக் அப் ஆன அந்த மார்க்கெட் நடிகை காதலர் மீண்டும் மீண்டும் வந்து டார்ச்சர் செய்வதால் கடுப்பாகி சென்னை பக்கமே வராமல் அவாய்ட் செய்கிறாராம். ஒரு சில படங்களிலேயே நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தார் அந்த மார்க்கெட் ஸ்ட்ரீட் நடிகை. அப்போதே தலையாட்டி நடிகருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தியவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னை வந்தார். நடிகர் போய் நடிகையுடன் ஒட்டிக்கொள்ள இருவரும் ஒரே வீட்டில் வாழும் அளவுக்கு நெருக்கமானார்கள். இந்த ஜோடி கல்யாணம் பண்ணிக்கும் என்று நம்பி இருந்தவர்களின் நம்பிக்கையில் பாட்டில் பாட்டிலாக மண்ணை அள்ளி போட்டார் நடிகர். நடிகரின் கூடா நட்பு காதலுக்கு வேட்டு வைத்தது. நடிகரின் போக்கால் கடுப்பான நடிகை நடிகரை மீண்டும் பிரிந்துவிட்டாராம். ஹைதராபாத்திலேயே தங்கியிருக்கும் நடிகை சென்னை பக்கம் தலை காட்டவே மறுக்கிறாராம். நடிகரும் அவரது நண்பர்களும் தரும் டார்ச்சர்கள் தான் காரணம். நடிகரின் பாதை மாறுவதற்கு பார்ட்டி பிரதர்ஸ் க்ரூப் நடிகர்கள் தான் காரணம் என்றும் அதனால் அந்த க்ரூப் மீதே நடிகை செம காண்டில் இருப்பதாகவும் கேள்வி!


Market actress is hesitating to visit Chennai to avoid her ex boy friend's torture

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS