பாலிவுட் நடிகை கரீனா கபூர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்குப் பின்னும் பல படங்களில் நடித்து வருகிறார். ஓய்வில்லாத ஷூட்டிங், கரீனாவை ரொம்பவே டயர்டாக்கி விட்டதாம். இதனால், புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இருக்கிறார் கரீனா. விடுமுறையை கழிக்க யார் கண்ணிலும் தென்படாத இடத்துக்குச் செல்லவுள்ளேன் என்று நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்குப் பின்னும் பல படங்களில் நடித்தார். கர்ப்பமடைந்த பின் சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்தார். கொஞ்ச நாள் கேப் விட்டவர் பின்னர் குழந்தை பிறந்ததும், நடிப்பில் மீண்டும் முழு கவனம் செலுத்தினார். ஓய்வில்லாத நடிப்பும், வெளிப்புற படப்பிடிப்பும், கரீனாவை ரொம்பவே களைப்பாக்கி இருக்கிறது. தற்போது, அவர் 'வீர் தி வெட்டிங்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் விடுமுறையை கழிக்க, கணவர் சயீப் அலி கான், மகன் தைமூருடன் வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார் கரீனா கபூர். சுற்றுலா திட்டம் குறித்து கரீனா, "அடுத்த ஒரு மாதத்துக்கு, என்னை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. வெளிநாட்டிலும், யார் கண்ணிலும் தென்படாத ஓர் இடத்தில் கணவர், குழந்தையுடன், விடுமுறையை கழிக்கப் போகிறேன்'" எனக் கூறியிருக்கிறார்.
Bollywood actress Kareena Kapoor married Saif Ali Khan. Kareena acting in many films after marriage. The restless shooting is pretty tired. Kareena Kapoor said that she will went to visit secret place on vacation.