அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு?- வீடியோ

Filmibeat Tamil 2018-03-10

Views 4K

சூப்பர் ஸ்டார் சாதா ஸ்டாராகிவிட்டதால் அந்த தலைப்பு யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் அடிக்கடி எழுந்து அடங்குவது உண்டு. அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு கிளம்பினாலே எப்பொழுதுமே ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தான் அது எங்கள் தலைவர் தான் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டாரே அந்த பட்டத்தை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கிவிட்டார். அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என்று கூறி சாதா ஸ்டாராகிவிட்டார். அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதியாகிவிட்டார். ரஜினியின் வழியில் காமெடி செய்வது, குழந்தைகளை கவர்வதுமாக உள்ள விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவாரா? எந்த பட்டமும் வேண்டாம் என தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் அஜீத்தை அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் கோதாவில் இறக்கிவிட்டுள்ளனர். அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் பெரிது அல்ல. ஆனால் அவரின் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கிறார்களே. விஜய்யை அடுத்து ரஜினி ஸ்டைலில் காமெடி செய்வது, குட்டீஸ்களை கவர காட்சிகள் வைப்பதுமாக உள்ளவர் சிவகார்த்திகேயன். ஏற்கனவே பெரிய குட்டீஸ் படை தலைவனாக இருக்கும் அவரும் சூப்பர் ஸ்டார் ரேஸில் உள்ளார்.

Rajinikanth has ditched superstar title on social media ahead of his political entry. Fans are wondering as to who will be the next super star.

Share This Video


Download

  
Report form