நான் உனக்கு ஏற்றவன் இல்லை என்று கூறியும் என்னை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்தவர் அஸ்வினிதான் என்று அழகேசன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை கல்லூரி விட்டு வீடு திரும்பும் போது அழகேசன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில் நிலைத்தடுமாறிய அஸ்வினி உயிரிழந்தார். அழகேசனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அழகேசனை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது போலீஸாரிடம் அஸ்வினி செத்துட்டாளா இல்லை உயிரோடு இருக்கிறாளா என முதலில் கேட்டுள்ளார் அழகேசன். அவர் இறந்துவிட்டார் என்று போலீஸ் கூறியதும் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.