கனடாவைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழுக்கு வந்த அவர், தற்போது வடிவுடையான் இயக்கி வரும் 'வீரமாதேவி' சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு 'கரேன்ஜிட் டு சன்னி' என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகி வருகிறது. ஜீ டிவி குழுமம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபமாக தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கவர்ச்சி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்த சன்னி லியோனுக்கு இப்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சன்னி நடிப்பில் 'வீரமாதேவி' சரித்திரப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. சன்னி லியோன் டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். ஆபாசப் படங்களில் நடித்த காலத்தை மறக்கவிரும்புவதாகக் கூறும் இவர் சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றார். சன்னி லியோன் பற்றிய ஆவணப்படத்தை ஜீ டிவி குழுமம் தயாரிக்கிறது. சன்னி லியோனின் நிஜ பெயர் கரேன்ஜிட் கவுர் வோஹ்ரா. அவர் ஏன் சன்னி லியோன் ஆனார்? அதன்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதற்கான அனைத்து கேள்விகளுக்கும் இந்த படத்தில் அவர் பதிலளிக்கிறாராம்.
Canadian actress Sunny Leone has been a popular actress in Bollywood for the last few years. Sunny Leone's career is now being documented as 'KarenjitToSunny'. Zee TV group produces this documentary film.