7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் மம்தா!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-07

Views 10

ஊமை விழிகள்... தமிழ் சினிமாவில் மறக்க முடியாத த்ரில்லர் படம் இது. எண்பதுகளில் வெளியான இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். முழுக்க முழுக்க பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களால் உருவாக்கப்பட்ட படம் இது. இப்போது இதே தலைப்பில் மீண்டும் தமிழில் படம் எடுக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் ஊமை விழிகளின் ரீமேக்கோ தொடர்ச்சியோ அல்ல. புதிய படம். இந்தப் படத்தில் பிரபு தேவா நடிக்கிறார். ஆகாஷ் சாம் என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கு விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடி மம்தா மோகன்தாஸ். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து மம்தா மோகன்தாஸ் கூறுகையில், "7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். இளம் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் டான்ஸ் குரு பிரபுதேவாவுடன் இணைவது மகிழ்ச்சி," என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள மெர்க்குரி படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது.


Actress Mamta Mohandas is back to Tamil cinema after seven years through Oomai Vizhigal movie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS