ஈரோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி ஆர்பாட்டம்

Oneindia Tamil 2018-03-06

Views 41

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடாத கட்சிகள் கொங்குநாட்டில் புறக்கணிக்க படவேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்

ஈரோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கண்டனம் ஆர்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ ஆர் ஈஸ்வரன் ஈரோடு மாவட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அனைத்து வசதிகள் இருந்தும் புறக்கணிக்க படுவதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்றார்

மேலும் மதுரை , தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் தங்கள் மாவட்டத்தில் தான் மருத்துவனை வர வேண்டும் என்று போராடுகின்றனர் ஆனால் கொங்கு நாட்டில் அப்படி போராட அமைச்சர்கள் முன்வருவதில்லை அதனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடாத கட்சிகள் கொங்குநாட்டில் புறக்கணிக்க படவேண்டும் என்று தெரிவித்தார்

National Party leader E. R. Eswaran said that the parties that did not fight for AIIMS should boycott Konkan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS