பாபர் மசூதி விவகாரம் சரி செய்யப்படவில்லை என்றால், இந்தியாவும் சிரியாவாக மாற வாய்ப்புள்ளது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கர் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்நாட்டு போர் உச்சத்தில் உள்ளது. குழந்தைகள் கூட கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராமர் கோயில் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவும் சிரியா போல மாறிவிடும் சூழல் உள்ளதாக ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.