90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-05

Views 1

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. உலகில் எத்தனையோ திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டாலும், அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்குத்தான் இன்று வரை பெரும் மதிப்பும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது. அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இது 90வது ஆண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. இன்றைய விழாவை அமெரிக்காவின் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். விழாவுக்கு முன்பு, வழக்கமாக நடக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சி சற்று முன் தொடங்கியது. இதில் சர்வதேச பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது The Shape of Water திரைப்படம். Get Out மற்றும் Three Billboards Outside Ebbing, Missouri ஆகிய படங்களும் சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு முட்டி மோதுகின்றன.

90 ஆண்டு ஆஸ்கர் விருது சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு பெண் ஒளிப்பதிவாளர் பெயர் இந்த ஆண்டுதான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் Rachel Morrison. படம்: 'Mudbound'. சிறந்த நடிகர் பிரிவில் Darkest Hour படத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலாக நடிக்க Gary Oldman, சிறந்த நடிகை பிரிவில் Three Billboards Outside Ebbing, Missouri படத்தில் நடித்த Frances McDormand ஆகியோருக்கு விருதுகள் கிடைக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

The 90th Oscar award ceremony has been kick started with usual red carpet reception at the Dolby Theatre in Hollywood Today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS