ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், இயக்குநர் ரஜத் ரவிசங்கர், 2D Entertainment ராஜசேகர் பாண்டியன், ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி- 17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார், இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தொகுப்பு ரூபன்.
Karthi-Rakul Preet Singh starrer Karthi-17 was launched formally this morning with a Pooja in Chennai.