விஜய் சேதுபதிக்கு பிரமாண்ட கட்-அவுட்!

Filmibeat Tamil 2018-03-03

Views 4

விஜய் சேதுபதியின் 'சீதக்காதி' படத்தின் வயதான தோற்றத்தின் கட் அவுட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித், விஜய் ரசிகர்களே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக சென்னை தியேட்டர் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது இந்ந கட் அவுட்.
விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் புகழ் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் சீதக்காதி.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது, 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி, சயீரா நரசிம்ம ரெட்டி, செக்கச் சிவந்த வானம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதில், விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் 25-வது படமாக சீதக்காதி உருவாகி வருகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் விஜய் சேதுபதியின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் படத்தில் இது போன்று வயதான தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படமாக்கப்பட்டது. அப்போது, அந்த திரையரங்கில் விஜய் சேதுபதியின் வயதான கெட்டப் அடங்கிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.



Vijay sethupathi giant cut out erected for shooting in chennai. Fans offered milk abhishekam for this cut-out.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS