ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் ஜாலியாக சிரித்து கொண்டிருந்த நடிகை!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-01

Views 8

ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது பிரபலங்களை பார்த்து சிரித்து பேசிய நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மீது ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். துபாயில் கடந்த சனிக்கிழமை மாலை உயிர் இழந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நேற்று மும்பையில் மாநில அரசு மரியாதையுடன் நடந்தது. முன்னதாக அவரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டிருந்தது. பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். போனி கபூரின் தம்பி அனில் கபூர் குடும்பத்திற்கு நெருக்கமானவரான நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் பிரபலங்களை பார்த்து சிரித்து பேசியுள்ளார். அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் சோகமாக இல்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் இப்படியா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்துப் பேசுவது என்று ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஜாக்குலினை விளாசியுள்ளனர். இறுதிச்சடங்கில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஜாக்குலின் பெர்ணான்டஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.


Sridevi's fans and netizens slammed actress Jacqueline Fernandes who was caught smiling and greeting people happily when she came to pay last tribute to legendary actress Sridevi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS