ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் ரத்தினவேல் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவினால் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 89. நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்த ரத்தினவேல் பாண்டியன் வக்கீலாக பணியை தொடங்கியவர். வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் குருவாக இருந்துள்ளார்.