ஆதரவற்ற முதியோர்களை பராமரிப்பதற்காக வாங்கும் நிதியை பிறருக்கு செலவு செய்யவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவதூறு பரப்பப்படுவதாக பாலேஸ்வரம் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் முதியோர் காப்பகத்தில் இறந்த முதியவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 3 நாட்களாக கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காப்பக நிர்வாகி பாதிரியார் தாமஸ் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Paleswaram st joseph's hospice administrator Father Thomas justifying his service and acccusing the opponents of his service only raising unwanted issues for the funds he receiving.