மறைந்த மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தாம் மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராக பதவி வகித்த காலத்தில்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை நாட்டுக்கு அறிமுகம் செய்தார். இந்த பிடி பருத்தி விதைகள் பலன் தராமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்ய நேரிட்ட போது இம் மரணங்களுக்கு பொறுப்பேற்பதாகவும் கூறியவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன். தமிழகத்தின் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன். 1961-ம் ஆண்டு உத்தரப்பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். 1990-ல் மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராகவும் இருந்தார். அப்போதுதான் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன.