ஸ்ரீதேவி மறைவுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கடைசி போட்டோக்கள்... வைரல் வீடியோ
ஸ்ரீதேவி உயிரிழந்தபோது அவர் கலந்து கொண்ட கடைசி விழாவும் கடைசி புகைப்படமும் வைரலாகி வருகிறது. ஸ்ரீதேவி, கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் துபாயில் நடந்த நடிகரும் உறவினருமான மோஹித் மார்வா திருமணத்துக்கு சென்றனர்.
அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்தது. இவரது மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. உடற்பயிற்சி செய்து தனது உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாரா என்று அவரது நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அவர் கடைசியாக கலந்து கொண்ட மோஹித் மார்வாவின் திருமண விழாவில் எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன. இதை பார்த்து திரையுலகினரும் ரசிகர்களும் மனவேதனை அடைந்துள்ளனர்.