தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டித் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. தொடரை வெல்வதற்காக கடைசி ஆட்டம் வரை காத்திருப்பதில் இரு அணிகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது.
மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றுள்ளது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3 போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலையில் இருந்தது.
indian man and women cricket team waiting for win t20 series against south africa