இருந்த ஒரு ஃபைனான்ஸியரையும் கேஸை போட்டு பகைத்துக்கொண்டதால் ஃபைனான்ஸுக்கு வழியில்லாமல் அல்லாடுகிறதாம் திரையுலகம். தமிழ் சினிமா எப்போதுமே ஃபைனான்ஸியர்களை நம்பித்தான் இருக்கிறது. முன்பு சேட்டு குடும்பங்கள்தான் அந்த பணியை செய்து வந்தார்கள். பின்னர் தென் தமிழகத்தை சேர்ந்த புள்ளி தலையெடுத்தார். அவர் தலையெடுத்த பின்னர்தான் ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாக மாறினார்கள். இருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒதுங்கிக்கொள்ள ஹீரோக்களே தயாரிக்க தொடங்கினார்கள். ஆனால் பணம் ஃபைனான்ஸியருடையது.
இந்த சங்கிலிக்கு சமீபத்தில் வெட்டு விழுந்தது. ஒரு தற்கொலை விவகாரத்தில் முக்கிய ஃபைனான்ஸ் புள்ளி சிக்கியதால் தமிழ் சினிமாவுக்கு ஃபைனான்ஸ் முக்கால்வாசி நிறுத்தப்பட்டுவிட்டதாம். விளைவு சில ஹீரோக்கள் தங்களது தயாரிப்பு நிறுவனங்களையே இழுத்து மூடும் நிலைக்கு வந்துவிட்டார்கள். தமிழ் சினிமாவின் ஃபைனான்ஸ் தேவையை யார் தீர்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Now a days Kollywood is suffering for getting finance for new movies after suicide contoversy.