காய்கறி வண்டியில் மூட்டையோடு மூட்டையாக முதியவர் ஒருவரின் பிணம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே சென்ற காய்கறி வண்டியில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே இறந்தவர் ஒருவரின் சடலம் மூட்டையாக கட்டப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த வண்டியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த வண்டியை ஆய்வு செய்த பொதுமக்கள் காய்கறிகளுடன் மறைந்து கடத்தப்பட்ட சடலத்தை கைப்பற்றினர்.