நாம் உயிரோட இருக்க உதவும் உறுப்புகளில் இதயமும் ஒன்று. இந்த இதயம் தான் நமது உள்ளுறுப்புகள் அனைத்திற்கும் இரத்தத்தை பம்ப் செய்கிறது. நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் தான் நம் இதயத்தை காக்க பயன்படுகிறது.
தமனிகள் தான் ஆக்ஸிஜன் நிறைந்த சுத்தமான இரத்தத்தை இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்கிறது. கொழுப்புகள், கசடுகள் போன்றவை தமனிகளில் அடைப்பை உண்டாக்கி இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துகிறது. இந்த தமனிகளை சுத்தமாகவும் அடைப்பு இல்லாமல் வைத்து கொள்ள நாம் சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
https://tamil.boldsky.com