விஜய்யின் 62-வது திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிறது. இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. 'கத்தி' படம் எடுக்கப்பட்ட லொக்கேஷனிலும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்தகட்டமாக சில காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் படமாக்குவதற்காக படக்குழுவினர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்களாம்.
விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் 62-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். 'விஜய் 62' படத்திலும் விவசாயிகள் பிரச்னை பேசப்படுகிறதாம்.
#Vijay62 first schedule shoot was over in Chennai. The film was shot in Kolkata for the second stage. In this case, Vijay 62 crew will go to America to shoot songs.