வசதிக்கேற்ப அரசியல் என்ற புதிய பாணி அரசியலை செய்து வரும் ரஜினி, கமல், விஷால் போன்ற சினிமாக்காரர்கள் தமிழக மக்களின் உரிமை குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஏதாவது பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பில் அப்பாவி மக்கள் உள்ளனர்.
ரஜினி வழக்கம் போல எதுவும் பேச மாட்டார். அவர் எப்பப் பேசுவார், எப்படிப் பேசுவார்னு அவருக்கே தெரியாது. அவருக்குத் தேவைப்பட்டால் பேசுவார். ஆனால் மக்களுக்கு அடி கிடைக்கும்போதெல்லாம் இவர்கள் பேச வேண்டும். அவர்களுக்காக இறங்கி ஓடி வர வேண்டும். மக்களோடு மக்களாக மாறி போராட வேண்டும்.
Rajini, Kamal and other Tamil Cinema actors are keeping mum on the verdict of Cauvery issue by the SC.