விஜய் படத்தில் ஜூலியும் நடிக்கிறாரா..

Filmibeat Tamil 2018-02-14

Views 2.4K

விஜய் படத்தில் ஜூலி நடிப்பதாக கூறப்பட்டது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. மெர்சல் படத்தை அடுத்து விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விவசாய பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
விஜய் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான் என முருகதாஸ் தெரிவித்த பிறகும் வனமகன் புகழ் சயீஷா சைகல் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று சயீஷா தெரிவித்துள்ளார். விஜய், முருகதாஸ் படத்தை பற்றிய செய்திகளை விட வதந்திகள் தான் அதிகம் வருகிறது. முருகதாஸ் ஏதாவது அப்டேட் கொடுக்க மாட்டாரா என்று எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

Vijay 62 team has made it clear that Sayeesha Saigal and Bigg Boss Julie are not part of Vjiay starrer being directed by A.R. Murugadoss. Gossips about Vijay 62 is doing rounds frequently.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS