அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத ஒருவர் கட்சியைச் சொந்தம் கொண்டாடுவதாகத் தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் வீரமணி, ஜெயலலிதாவிடம் கட்சியின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட பணத்தை எல்லாம் கொள்ளையடித்தவர்கள் கட்சியை உடைப்பதற்கும் அழிப்பதற்கும் சூழ்ச்சி செய்வதாகக் குற்றஞ்சாட்டினார்.
minister veeramani slammed ttv dinakaran family