கோவையில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஆர் என்ற மருத்துவமனையில் பயிற்சி நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் , கடந்த 5 ஆம் தேதி காலை ஸ்வேதாவிற்கு இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தி ரவீந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த உடன் பணிபுரியும் பயிற்சி மாணவிகள் , கோவை உக்கடத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரனை இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போஸ்கோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். கைது செய்த ரவீந்தரனை இன்று தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மருத்துவர் ரவீந்தரனுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை தனி நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து ரவீந்தரனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.